Saturday, July 31, 2010

புலோலி-எனது தாய்மண்



புலோலி 

மாகாணம்  -வட மாகாணம்
மாவட்டம் - யாழ்ப்பாணம் 
அமைவிடம் 9.8° N 80.216667° E
கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30) 


புலோலி இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வடமராட்சி எனும் பிரிவில் அமைந்துள்ளது. இது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில், பருத்தித்துறைக்குச் சமீபமாக அமைந்துள்ளது. 

புலோலி பழம்பெரும் பாரம்பரியத்தையும் நீண்ட புராதன மொழி, சமய கலாசார மரபு விழுமியங்களையும் தனித்துவமாகத் தன்னகத்தே கொண்ட புகழ்பூத்த தொன்மைக் கிராமம் ஆகும். புலவர்களின் குரல் ஒலித்தமையால் புலோலி என்னும் காரணப்பெயர் இதற்கு சூட்டப்பெற்றது என்பது கல்விமான்களின் முடிபு. பச்சிமப் புலவர்கான நகரம் என இதற்கு மறுபெயருமுண்டு. 

பருத்தித்துறை நகரசபையின் தெற்கு எல்லை இதன் வடக்கு எல்லையாகவும், பருத்தித்துறை மருதங்கேணி வீதி இதன் கிழக்கு எல்லையாகவும், துன்னாலை, அல்வாய் என்னும் கிராமங்கள் முறையே இதன் தெற்கு மேற்கு எல்லைகளாகவும் அமைந்துள்ளன. அரச நிர்வாக நோக்கில், புலோலி திக்குவாரியாக 14 கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் பண்டிதர்கள், வித்துவ சிரோமணிகள், நாவலர்கள் போன்றோர் புலோலியில் பிறந்து பணியாற்றித் தத்தம் முத்திரையைப் பதித்து மறைந்தமைக்கான சான்றுகள் உள்ளதாக அறியப்படுகிறது. 

மூதறிஞர்கள் 

புலோலி நா. கதிரவேற்பிள்ளை 
புலோலி குமாரசுவாமிப் புலவர் 
திலைநாத நாவலர் 
தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை 
சைவப்பெரியார் சு. சிவபாதசுந்தரனார் 
கவிஞர் மேலைப்புலோலி வே. சிவக்கொழுந்து 
அறிஞர் கந்தமுருகேசனார் 


அறிஞர்கள் / கலைஞர்கள் / பேராசிரியர்கள் / சமய ஆய்வாளர்கள் 

பேராசிரியர் கணபதிப்பிள்ளை 
கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை 
பண்டிதர் வீ. பரந்தாமன் 
கு. பெரியதம்பிப் புலவர் 
என். கே. ரகுநாதன் 
புலோலியூர் க. தம்பையா 
க. சதாசிவம் 
செ. கந்தசாமி 
தெ. நித்தியகீர்த்தி 
சிங்கைத்திவாகரன் 
ஆ. இரத்தினவேலோன் 
க. குகநாயகி 
மங்களராணி 
சந்திரா இரவீந்திரன் 
கவிஞர் தீட்சண்யன் (எஸ். ரி. பிறேமராஜன்) 
சு. பேராசிரியன் 
முருக வே. பரமநாதன் 
வே. ஆறுமுகம் 
செல்வத்தம்பி 
மாணிக்கவாசகர் 
சூரியகுமாரி பஞ்சநாதன் 
பால வைரவநாதன் 
வே. ஆறுமுகம், 
விநாயகமூர்த்தி 
பு. வேலவகுமார் 
ஆ. தேவராசன் (தொல்லியல்) 

ஆலயங்கள் 

உபயகதிர்காமம் ஸ்ரீ சக்கர சண்முகர் ஆலயம் 
புற்றளை சித்தி விநாயகர் ஆலயம் 

No comments:

Post a Comment